உலக ஒவியர் அமைப்பின் (World Artist Oraganization) சார்பில் ஒவிய ஆசிரியர் பப்புலா பாபி ராஜி வரைந்த ஒவியம் சிறந்த ஒவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா பொது ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு கல்வி மற்றும் கலை மன்றங்கள் பொது மக்களின் தனி திறனை வெளிகொணர பல்வேறு போட்டிகளை இணையதளம் வழியே நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் ஆந்திராவை சேர்ந்த ஓவிய ஆசிரியர் டாக்டர் பப்புலா ராஜி அவர்கள் வரைந்த ஒவியம் இணையத்தில் பல தரப்பு மக்களின் ஆதரவு பெற்று வெற்றி பெற்றுள்ளது.

பொது ஊரடங்கு காலகட்டத்தில் நாம் பின்பற்ற வேண்டிய அனைத்து விதமான சுகாதார முறைகளும்,சமூக நடத்தைகளை குறித்து தெளிவாக சொல்வதே இந்த ஒவியத்தின் தனி சிறப்பாகும்.

இந்த ஒவியத்தில் பயன்படுத்தபட்டிருக்கும் இளைஞரின் உருவம் மனித உரிமைகள் ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் ஆவார்.
