சூளைமேடு : மே,10
கொரோனா பெரும் தொற்று பாதிப்பின் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தி நடைமுறைபடுத்தி வருவதால் பல தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக தலித் மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை சூளைமேடு, அண்ணா நெடும்பாதை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த நான்கு நாட்களாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்ட ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கி வருகின்றனர்.

நான்காவது நாளான இன்று பொது மக்கள் ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு பிரியாணி
கட்சியின் நிறுவனர் தலைவர் நெல்லை மணி அவர்கள் வழங்கினார். உடன் கட்சியின் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
இதில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கிச்சென்றனர். இதற்கு உறுதுணையாக பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
