சென்னை:
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 243 கால்நடை உதவி மருத்துவர்களை மீண்டும் பணி நியமனம் செய்யக்கோரி அறவழி உண்ணாவிரத போராட்டம் சென்னை, சிவானந்தா சாலை அருகில் நடைப்பெற்றது.
இதில் கடந்த 13 வருட சேவைக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறையில், கால்நடை உதவி மருத்துவர்களாக பணிபுரிந்த கால்நடை மருத்துவர்களை பணியிலிருந்து 57 பேர் சென்ற ஆண்டு மார்ச் மாதமும், 187 பேர் மார்ச் 2025 லும் மொத்தம் 243 கால்நடை மருத்துவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2012-ல் 10 (a ) 1 விதியின் கீழ் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 843 கால்நடை மருத்துவர்கள், தங்களின் 13 ஆண்டு கால சேவையை அர்ப்பணித்த பிறகு, தற்போது தமிழ்நாடு அரசின் திடீர் உத்தரவுகளால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் பசு, ஆடு, கோழி வழங்கும் அரசு திட்டங்களையும். பல்வேறு கால்நடை நலதிட்டங்களையும் நிறைவேற்ற அரசு கால்நடை மருந்தகங்களில் பணியமர்தப்பட்டனர்.
இந்த மருத்துவர்கள், பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய பின், TNPSC தேர்வு காரணமாக, 57 பேர் மார்ச் 2024லும், மேலும் 187 பேர் மார்ச் 2025 ல் என மொத்தம் 243 கால்நடை மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த அறவழிப் போராட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்களின் முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.
ஒரே முறையிலான நிரந்தர நியமனம் (one time regularisation) 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியதை அடிப்படையாக கொண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
57 மற்றும் 187 கால்நடை மருத்தவர்களும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தபட வேண்டும், ஏற்கனவே பணிபுரிந்த மற்றும் தற்போதுள்ள காலிப் பணியிடங்களிலும், அல்லது மேம்படுத்தப்பட்ட கால்நடை கிளை நிலையங்களில் மீண்டும் பணியமர்த்த வேண்டும்,
வழக்கு முடிவடையும் வரை முன்பு வழங்கப்பட்ட அதே ஊதியத்தில் regular time pay scale இல் ஒப்பந்த அடிப்படையில் (contract appointment) 3 ஆண்டுகள் பணி வழங்கி பின்னர் பணி நிரந்தரமாக்க அரசாணை வெளியிட்டு நியமனம் வழங்கப்பட வேண்டும்,

மேற்குறிப்பிட்ட முறைகளில் பணி நியமனம் செய்வதென்பது சட்ட விதிமுறைகளுக்குட்பட்டது மற்றும் நடைமுறை சிக்கல்கள் இல்லாதது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அனைத்து வழக்குகளும் ,243 கால்நடை மருத்துவர்கள் பணி நியமனம் முடிவடையும் வரை 7.5.2025 அன்று வெளியிடப்பட்ட 216 கால்நடை உதவி மருத்துவர்கள் பணி நியமன தேர்வுக்கான TNPSC அறிவிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பணி நீக்கம் செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்களின் நியாயங்கள் மற்றும் இன்னல்கள்:
243 கால்நடை உதவி மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்களில் சுமார் 10 சதவீதம் ஆகும்.
243 கால்நடை மருத்துவர்களில் பலர் 40 முதல் 55 வயதைக் கடந்தவர்கள், அதனால் புதிய TNPSC தேர்வுக்கு தயார் செய்வது கடினம் மேலும் தற்போது கல்லூரி முடித்து வந்த இளம் கால்நடை மருத்துவ பட்டதாரிகளுடன் போட்டி தேர்வெழுதி பணியில் சேர்வதென்பது மிகக்கடினம்,
அரசு உத்தரவின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட பின்பு அரசு கால்நடை மருந்தகங்களில் பணியாற்றினர்,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பின்தங்கிய கிராமங்களில் பணியாற்றினர்,
கொரோனா, வெள்ளம், தொற்றுநோய்கள் வந்தபோதும் உறுதியாக பணியாற்றியவர்கள்
இன்று வேலை இழந்து பல்வேறு இன்னல்களுக்கும், மன உளைச்சல் களுக்கும் ஆளாகியுள்ளனர். கடன், உடல்நலம் பாதிப்பு, மன அழுத்தம், குழந்தைகளின் கல்வி. வயதான பெற்றோர்களின் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார. சமூக நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர்,
இவை பணி இழந்த கால்நடை மருத்துவர்களின் வாழ்வாதார பிரச்சினையாக மட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்போர்,மற்றும் மக்களின் சுகாதாரப் பிரச்சனையாகவும் உள்ளது,
பணி நீக்கம் காரணமாக கால்நடை சுகாதார சேவைகள் முடங்கியுள்ளன.
12 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பணி அனுபவமுள்ள மருத்துவர்களை இழந்து தமிழகத்து விவசாயிகளுக்கும், கால்நடை வளர்போருக்கும் இக்கட்டான சூழ்நிலையையும், சுமையையும் ஏற்படுத்தக் கூடாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பணியிழந்து, வாழ்வாதரமின்றி உள்ள 243 கால்நடை மருத்துவர்களை மீண்டும் பணியமர்த்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர், தலைமை செயலாளர், மற்றும்கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் மற்றும் துறை இயக்குநர் ஆகியோர்களிடம்
இந்த 243 பணி நீக்கம் செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென 100க்கும் கால்நடை மருத்துவர்கள் இந்த அறவழிப் போராட்டத்தின் மூலம் வாழ்வாதார கோரிக்கை வைத்தனர்.
