சென்னை: சிலம்பம் மற்றும் துரோணா மூன்றாம் கண் யோகா கலையின் மூலம் போதை இல்லா இந்தியா என்கிற விழிப்புணர்வு உலக சாதனை வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் அனேக்சர் பள்ளியில் பயிலும் ஆஷா மற்றும் ராஜேஷ் ஆகியோர்களின் மகனும், அகத்தியா சென்னை சிலம்ப கூடத்தை சேர்ந்த மாணவர் சுகன் என்பவர் போதை இல்லா இந்தியாவை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் மற்றும் துரோணா மூன்றாம் கண் யோகா கலையின் மூலம் பல்வேறு மாநிலங்களை கண்களை மூடிக்கொண்டும், சிலம்பக் கம்பின் மூலம் தொட்டும், அதற்கான தலை நகரங்களை சொன்னது காண வந்த பொதுமக்களை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது. இவருடைய இந்த அசாதாரண உலக சாதனைக்கு பயிற்சியாளர் ஆசான் தீபா முத்துக்குமார் அவர்கள் உற்றத்துணையாக இருந்ததுகுறிப்பிடத்தக்கது. மாணவர் சுகன் உலக சாதனையை வெளிக்கொணரும் விதமாக வின்னர்ஸ் புக் ஆஃப் வேல்ட் ரெக்கார்ட்ஸ் மூலம் அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் நகர்மன்ற தலைவர் பி. கே.மூர்த்தி , பள்ளி முதல்வர் சுமதி,டீன் தசரதராஜன், அகத்தியா அ.ஞானம், தமிழ்நாடு சிலம்ப கழகம் செயலாளர் மற்றும் துரோணா மூன்றாம் கண் நிறுவனர் அருள்முருகன் மற்றும் சென்னை சிலம்ப கூடம் நிறுவனர் ஜி. ஆர். முத்துக்குமார், மாஸ்டர் அனிஃபா, மாஸ்டர் எல். லட்சுமிபதி மற்றும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆர். எம். எம். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு அசாதாரண உலக சாதனையை செய்து வியப்பில் ஆழ்த்திய மாணவன் சுகனை மனதார வாழ்த்தினர்.