சென்னை:
ட்ரெயின் அறக்கட்டளை
மற்றும் ரியல் அறக்கட்டளை சார்பில் இளையோருக்கான சில்லறை வணிகம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நிகழ்ச்சி
ரியல் அறக்கட்டளையின் அறங்காவலர் எம்.எம் லட்சுமி அவர்கள் தலைமையிலும்,ரியல் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் முனைவர் லாரன்ஸ் அவர்கள் முன்னிலையிலும் மகாகவி பாரதி நகரில் உள்ள ரியல் அறக்கட்டளையின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்வில் ரியல் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் லாரன்ஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் ட்ரெயின் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டின் நிர்வாக அலுவலர் இளையபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் சேவ் டிரஸ்ட் இயக்குனர் பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் ஜெபமணி, பயிற்றுநர் ஜான்சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது ட்ரெயின் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டின் நிர்வாக அலுவலர்
இளையபாரதி அவர்கள் பேசும் போது, இந்திய அளவில் ட்ரெயின் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் மையங்கள், இப்பயிற்சியின் நோக்கம், பாடப்பிரிவுகள் வேலை வாய்ப்புக்கான வழி வகைகள் போன்றவற்றைப் பற்றி எடுத்துரைத்தார். சேவ் டிரஸ்ட் நிறுவனத்தின் இயக்குனர் பாஸ்கர் அவர்கள் பேசுகையில், இளையோர் தொழில் முனைவராக பண்பு நலன்கள், கணினி மற்றும் ஆங்கிலம் பயில வேண்டிய அவசியம், வருமானத்தைப் பெருக்கி தான் மற்றும் தனது குடும்பம் மட்டுமல்லாமல் சமூகத்திற்கு பங்காற்ற வேண்டிய தேவை குறித்து பேசினார்.
ஒருங்கிணைப்பாளர் ஜெபமணி அவர்கள் பேசுகையில், ஒரு மகளிர் உயர்வு பெற்றால் அவர் சார்ந்த குடும்பமும் எவ்வகையில் எல்லாம் உயரும், அதற்கு இளமை காலத்தில் தடையாக உள்ள சினிமா மற்றும் செல்போன் போன்றவற்றின் சீரழிவுகள் குறித்து பேசினார்.

இப்பயிற்சியில் பங்கேற்ற இளையோர்களுக்கு சீருடைகள், புத்தகப் பைகள், எழுது பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

மேலும் இப்பயிற்சியில் பங்கேற்ற இளையோர்கள் பல்வேறு கலை நிகழ்வுகள் மூலம் குறிப்பாக பாடல் மற்றும் நடனம் மூலம் தங்களுடைய எதிர்பார்ப்பு குறித்து ட்ரெயின் அறக்கட்டளை மற்றும் ரியல் அறக்கட்டளைக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பயிற்றுனர் அன்பரசன் அனுகிரகா தீனன், அருண் ,பிரகாஷ் உள்ளிட்டோர் உற்றத்துணையாக இருந்தனர்.