கள்ளக்குறிச்சி:
மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் பி. எஸ்
ரமேஷ் அவர்கள் தலைமையில்
கள்ளக்குறிச்சி
ஏ.கே.டி. விடுதி கூட்ட அரங்கில் சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் பி. ஜெயப்பிரகாஷ். அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் இதன் நிறுவனர் பொதுச்செயலாளர் முனைவர் என் எஸ்.செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் சென்றுவர கோரி வருகின்ற 20.11.2024 புதன்கிழமை காலை தியாக துருவத்தில் பஸ் மறியல் போராட்டம் நடத்துவது, தமிழகத்தில் அரசு ஊழியர்கள். அலுவலர்கள். ஆசிரியர்கள். பணி நேரத்தின்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்திட அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,
போக்குவரத்து
விதிகளின்படி
பணியில் இருக்கும் போது அரசு போக்குவரத்து கழக பேரூந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் உள்ளிடவர்கள் முதல் அனைத்து தொழிலாளர்களும் பணிவிடை பெயர் வில்லை அணிந்திட நடவடிக்கை எடுக்க கோரியும்,
உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை அளவீடு செய்து உடனடியாக அகற்றி விட கோரியும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இறுதியில் பொதுச்செயலாளர் ஏ.டி.சக்திவேல் அவர்கள் நன்றியுரை நல்கினார்.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணைததலைவர் சதீஷ்குமார், துணை செயலாளர் பன்னீர் செல்வம், பொருளாலர் குமார்,பிரச்சார செயலாளர்
கந்தநாதன், செயற்குழு உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், காமராஜ், கோவிந்தராஜ், மகளிரணி நிர்வாகிகள் ராஜலட்சுமி, தனச்செல்வி, கல்பனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.