ஈரோடு: தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் பங்கேற்ற கில்லாடி குட்டீஸ் என்னும் தலைப்பில் பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனப்போட்டி மற்றும் பன்முகத் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்ச்சி இதன் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் கரூர் பா. சதீஷ் அவர்கள் தலைமையில் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி பள்ளி வளாக அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசை கலைக்கூடத்தின் நிர்வாகி இரா. கோமதி ஞானசேகரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

ஈரோடு லக்ஷிதா நாட்டியாலயம் நிர்வாகி ரம்யா ஜெயக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் ஈரோடு மாநகராட்சி 35 வது மாமன்ற உறுப்பினர் புவனேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற இந்நிகழ்வில் பரதம் ,வீணை, கரகம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளுக்கு நடுவராக பரதநாட்டிய குழு சிலம்பு செவ்வி மற்றும் கோமதி ஞானசேகரன் ஆகியோர் செயல்பட்டனர்.

ஒசூர் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் முனைவர் வி. கண்ணகி மற்றும் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வி. செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்

மேலும் இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ஈரோடு சம்பத் நகர் ரவீந்திரன் , வழக்கறிஞர் கரூர் எம். விஜயகுமார் , இளங்கோ, சமூக ஆர்வலர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஈரோடு தாரணிகா அவர்கள் நன்றியுரை நல்கினார்.