சென்னை:
ரியல் அறக்கட்டளை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு பல்வேறு நிறுவனங்களின் மூலம் உதவி பெற்று அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது.
குறிப்பாக ஆர்
ஆர் நகர், முல்லை நகர், இந்திரா நகர், தாமோதர் நகர் ,எம்.ஜி .ஆர் நகர் ,தேபர் நகர், ஜெ .ஜெ .நகர், உதயசூரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் இயலாத எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கான மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தார்பாலின் போன்றவற்றை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு பேரிடர் துறையின் அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரி மனோகரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, IAG கன்வீனர் சகாயம் , யுனிசெப் பேரிடர் துறையின் மகேந்திரன் ஆகியோரின் பரிந்துரையின் பேரிலும் அமேசான் மற்றும் டோனேட் கார்ட் நிறுவனங்களின் உதவியுடன் நான்காயிரம் ரூபாய் மதிப்புள்ள தார்பாலின் பைகள் 250 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

முன்னதாக ஓலை மற்றும் ஓட்டு வீடுகள், கால்வாய் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்களை கண்டறிந்து அதிலும் எளிய மக்களின் தகவலை சேகரித்து பட்டியல் தயார் செய்து அவர்களுக்கு தனித்தனியாக டோக்கன் வழங்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களிலே வழங்கப்பட்டன.

முதற்கட்டமாக வியாசர்பாடி நிகழ்வில் மண்டலம் -4 ,
37 வது மாமன்ற உறுப்பினர் ஜே. டில்லிபாபு, பி-5 காவல் ஆய்வாளர் பென்சீம் , இரண்டாவது கட்டமாக மாதவரம் நிகழ்வில் மாதவரம் மண்டலம் -3 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் சந்திரன், செயற்பொறியாளர் குமார் ,AHO Dr. இளஞ்செழியன், சுகாதார அலுவலர் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், ரியல் அறக்கட்டளையின் இயக்குனர் லாரன்ஸ் மற்றும் டிரஸ்ட்டி எம்.எம் இலட்சுமி, பகுதி வாழ் தொண்டு நிறுவனங்களான மனிதம் அறக்கட்டளை இயக்குனர் கருணாநிதி நியூஸ் டிரஸ்ட் நிறுவன இயக்குனர் காளிதாஸ் அண்ணல் அம்பேத்கர் இரவு பாடசாலை தலைவர் வண்ணை குமார், சமூக செயற்பாட்டாளர் தேவஅன்பு ஆகியோரின் முன்னிலையில் பகுதி வாரியாக பிரித்து மூன்று நாட்களாக ரியல் அறக்கட்டளையின் திறன் மேம்பாட்டு அலுவலகத்தில் வழங்கப்பட்டன.. முன்னதாக பேரிடர் காலங்களிலே எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள், தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருந்து மாத்திரைகள், சான்றிதழ்கள், வீட்டு பத்திரங்கள் உள்ளிட்ட அவசியமான ஆவணங்கள் ஆகியவற்றை பத்திரப்படுத்தி கொள்ள வேண்டிய அவசியத்தையும், மின்சாரம், குடிநீர் போன்றவை கிடைக்கப் பெறாத பேரிடர் நாட்களில் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், பெருநகர சென்னை மாநகராட்சியின் எங்கெல்லாம் ஷெல்டர்ஸ் , தமிழ்நாடு அரசின் அவசரகால தொடர்பு எண்கள் குறித்தும் விளக்கப்பட்டன. பல்வேறு வகையான தொற்று நோய்கள் பரவக்கூடிய பேரிடர் காலங்களில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்களை எவ்வாறெல்லாம் கையாள வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டன.மிகவும் ஏழ்மையில் உள்ள தேர்ந்தெடுத்த 250 குடும்ப நபர்களும் லீன் கிட் என்று சொல்லப்படக்கூடிய இவற்றைப் பெற்றவுடன் பெரு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அடைந்தனர் குறிப்பாக பொருட்களை வழங்கிய நிறுவனங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட பணியாளர்கள் த அருண் ,தீனன், கோபி , அமுல்ராஜ் ஆர். சி .டி இதர திட்ட பணியாளர்கள் டினேஜா, பிரகாஷ் , அனுகிரகா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
