சென்னை: டிஜிட்டல் மற்றும் ஐடி உலகளாவிய நிறுவனமான என்டிடி டேட்டாவின் நிதி உதவியுடன் நேட்டிவ் மெடிகேர் தொண்டு அறக்கட்டளை (என்எம்சி.டி) சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பின் தங்கிய அரசுப் பள்ளிகளில் கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தி நிறுவுதல் நிகழ்ச்சி என்எம்சிடி நிர்வாக அறங்காவலர் ஏ. எஸ். சங்கர நாராயணன் அவர்கள் தலைமையிலும்,என்டிடி டேட்டாவின் துணை தலைவர் கோபா கே அவர்கள் முன்னிலையில்
முகலிவாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் சிறப்புற நடைப்பெற்றது.

இந்நிகழ்வினை திட்ட மேலாளர் கௌதம் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் வகுப்பறை களை புதுப்பித்தல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், சுத்தமான குடிநீர் அமைப்புகளை நிறுவுதல் மற்றும் வணிகம் மதிய உணவு கொட்டகைகள் சேவைகளில் கட்டுதல் மற்றும் மாணவ-மாணவிகள் கைகழுவும் இடங்கள் என்டிடி மூலம் சீரமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.

மேலும் மாணவர்களிடையே சிறந்த சுகாதார நடை முறைகளை வளர்ப்பதற்காக தண்ணீர் சுகாதாரம் மற்றும் சுகாதார மேம்பாடு ஆகிய வற்றில் கவனம் செலுத்தும் திறன்களை நேட்டிவ் மெடி கேர் தொண்டு அறக்கட்டளை அறிமுகப்படுத்தியது.

மேலும் சென்னை முகலிவாக்கம் மற்றும் பூத்தப்பேட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய உள்கட்டமைப்பு வசதிகளை 500-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகளுக்கு என்டிடி டேட்டாவின் துணை தலைவர் கோபா கே வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், மாமன்ற உறுப்பினர்கள், என்டிடி டேட்டா குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர்
கலந்துக்கொண்டனர்.