மாதவரம்: ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் பெருநகர சென்னை மாநகராட்சியின் வழிகாட்டுதலின் பேரில் மண்டலம்- 4 வார்டு 27 இல் நகர்புற வீடற்றோர் காப்பகத்தை நடத்தி வருகிறது.

குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டு, உடல் நலம் குன்றியதாலும், வேலை வாய்ப்பு இல்லாததாலும், மனநல பாதிப்பினாலும், இன்னும் பல காரணங்களால் வீதியிலே தள்ளப்படுகின்ற, ஆதரவற்றவர்களை அரவணைத்து இது போன்ற காப்பகங்களில் தங்க வைத்தும், பராமரித்தும் மறுவாழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது மேலும் இரவு நேரங்களில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடற்ற சாலையில் ஆதரவற்று இருக்கின்ற நபர்களை கண்டறிந்து, அந்த பகுதி காவல் நிலையத்தின் மூலமாக மெமோ பெற்று அவர்களுடைய அடிப்படைத் தகவல்களை சேகரித்து அடிப்படை தேவைகளான உணவு ,உறைவிடம், பாதுகாப்பு ,மனநல ஆலோசனை, நோய்வாய்ப்பட்டிருந்தால் சிகிச்சை, வேலைவாய்ப்பற்றோருக்கு அவர்களின் தகுதி, நிலைக்கேற்ப வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருதல், இழந்த குடும்ப உறவுகளை தொடர்ந்து, அவர்களோடு பேசி மீண்டும் அவர்களை குடும்பத்தினரோடு இணைத்து வைத்தல், பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்தல், போதையில் அடிமையானவர்களுக்கு அதற்கான மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சைகள், பல்வேறு தரப்பட்ட சிறப்பு தின கொண்டாட்டங்கள் போன்றவை இக்காப்பகத்தில் அன்றாட பணிகளாக செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வீடற்றோர் தினம் அக்டோபர் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது அதை முன்னிட்டு ரியல் அறக்கட்டளையின் சார்பில் காப்பகத்தில் வீடற்றோர் தின விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் சந்திரன் அவர்கள் தலைமையில், செயற்பொறியாளர் குமார் அவர்கள் முன்னிலையில்,
AHO Dr. இளஞ்செழியன், சுகாதார அலுவலர் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், மெர்லின்-ஒருங்கிணைப்பாளர் ஷெல்டர் (நார்த்)ரியல் அறக்கட்டளையின் இயக்குனர் லாரன்ஸ் மற்றும் டிரஸ்ட்டி எம்.எம் இலட்சுமி இவர்களின் வழிகாட்டுதலில் பேரில் இத்தினத்தின் அவசியத்தை பற்றியும், வீடற்றோர் படுகின்ற அல்லல்களையும், அவர்களுக்கு தமிழக அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி செய்து வருகின்ற பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக கட்டணமில்லா எண்களான 100 , 1913 போன்ற எண்களில் தொடர்பு கொண்டு சென்னையில் இயங்குகின்ற 45க்கும் மேற்பட்ட காப்பகங்களில் அவர்களை சேர்ப்பதன் மூலம் மறுவாழ்வை எவராலும் தர முடியும் என்கின்ற தன்னம்பிக்கை வார்த்தைகள் எடுத்துரைக்கப்பட்டன.
மேலும் இந்த காபகத்தில் பயனடைந்து வருகின்ற இல்லத்து வாசிகளின் பல்வேறு பேச்சுப்போட்டி மற்றும் பாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
மேலும் நிகழ்ச்சியில் வீடற்றோர் தின நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மனிதநேயத்தோடு தன்னைப்போல் பிறரை அன்பு செய்யும் எவராலும் இந்நிகழ்வின் மூலம் புது வாழ்வை தர முடியும் என்கின்ற உறுதியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் நியூஸ் அறக்கட்டளை நிறுவன இயக்குனர் காளிதாஸ் ,அண்ணல் அம்பேத்கர் இரவு பாடசாலை தலைவர் வண்ணை குமார், மாதவரம் பகுதி சமூக செயற்பாட்டாளர் தேவ அன்பு, பாடும் பறவைகள் இன்னிசை குழு தலைவர் திருமால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
திருமால் அவர்களின் இன்னிசை நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காப்பகத் திட்ட பணியாளர்கள் அருண் ,தீனன், கோபி , அமுல்ராஜ் மற்றும் ஆர்.சி.டி இதர திட்ட பணியாளர்கள் டினேஜா, பிரகாஷ் , அனுகிரகா ஆகியோர் இணைந்து செயல்படுத்தினர்.
