தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசைக் கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் பரதநாட்டிய போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்வு!

கரூர்:
தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசைக் கலைக்கூடம் சார்பில் மாநில அளவிளான மாபெரும் பரதநாட்டிய போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பி.எல்.ஏ திருமண மண்டபத்தில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் கரூர் பா. சதீஷ் அவர்கள் தலைமையிலும், ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசைக் கலைக்கூடத்தின் நிறுவனர் கோமதி குணசேகரன் அவர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற முன்னாள் மாவட்ட நீதிபதியும், நுகர்வோர் நீதிமன்ற கரூர் மாவட்ட நீதிபதியுமான பாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக புலியூர் வீர திருப்பதி சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட சமூக சேவகரும்,ஒசூர் அரசு மருத்துவமனை செவிலியரும், மனிதநேய திலகம் வி. கண்ணகி அவர்களுக்கு தன்னம்பிக்கை சுடர் என்னும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட 1 வயது முதல் 12 வயது வரை உள்ள மாணவிகள் கலந்துக்கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.

இதில் சிறப்பாக பரதநாட்டியம் ஆடியவர்களுக்கு பரிசுகள் மற்றும் கலைச்செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுககும் சிறப்பு பரிசு மற்றும் கலைமகன், கலைமகள் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.