சேலம்:சேலம் பத்மவாணி பெண்கள் கல்வியியல் கல்லூரியில் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் விழா கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் வழக்கறிஞர் கரூர் பி. சதீஸ் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொண்ட சமூக சேவகியும், ஒசூர் அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளரும் மனிதநேய திலகம் வி. கண்ணகி அவர்களுக்கு தங்க மகள்-2024 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.