பெருந்தலைவர் குமாரசாமி காமராஜர் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு  ஈரோடு அருகிலுள்ள  அரசு துவக்க  பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு  கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில்  நாடாளும் மக்கள் கட்சியின்(நாமக) மாநில துணைத்தலைவர் வ. தனலெட்சுமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும் இதில் மாநில தொண்டரணி அமைப்பாளர் கோவிந்தராஜ், மாநில இளையஞரணி தலைவர் தனுஷ் சாரதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.