சென்னை:அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர் முன்னாள் காவல்துறை ஆணையரும்,தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் நிர்வாக இயக்குனருமான ஏ.கே விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் எதிர்கால சமூக செயல்பாடுகள் மற்றும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் இந்த சந்திப்பின் போது இந்த கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முனைவர் டி.கே சத்தியசீலன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.