சென்னை:அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் தலைவரும், மனித நேயருமான உத்தம்சந்த் கட்டாரியா அவர்களின் இல்ல இருமண வரவேற்பு விழா ஆழ்வார்பேட்டை யிலுள்ள நியூ உட்லண்ட்ஸ் விடுதியில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

இந்த வரவேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் வி. ஐ. டி வேந்தர் விஸ்வநாதன், திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ், தொல். திருமாவளவன் எம். பி, முன்னாள் நீதியரசர் எஸ். கே. கிருஷ்ணன்,ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்,நடிகர் தியாகராஜன் மற்றும் அவரது புதல்வரும் நடிகருமான பிரசாந்த், எவர்வின் கல்வி குழுமத்தின் தலைவர் புருஷோத்தமன், நடிகைகள் பாத்திமா பாபு, மதுவந்தி, முன்னாள் ஜெயா டிவி செய்தி வாசிப்பாளரும், குமுதம் டிவி செய்தி வாசிப்பாளருமான மோகன்ராஜ்,நடிகரும் சமூக ஆர்வலருமான பிரவீன்குமார், தயாரிப்பாளர் ராஜராஜன் மற்றும காவல் உயர் அதிகாரிகள்,முன்னாள் செய்தி வாசிப்பாளர்கள், சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.


மேலும் இநநிகழ்வில் யூடியூப் பிரபலங்கள், மாடலிங் துறையை சார்ந்தவர்கள்,சமூக சேவையாளர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.





