அகில இந்திய யோகா ஆசான்கள் சங்கம் சார்பில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி(WCC)மாணவிகளுக்கு விருது வழங்கி கெளரவிப்பு!

திருப்பூர்: அகில இந்திய யோகா ஆசான்கள் சங்கம் சார்பில் 5 வது தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் திருப்பூரில் நடைப்பெற்றது.
இதில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியை சேர்ந்த இளங்கலை பயிலும் மாணவிகளான ஹோஷினி மற்றும் வினோலினா ஆகியோருக்கு யோகா நட்சத்திரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் யோகாவில் சாதனை புரிந்த கல்லூரி மாணவிகளுக்கு சாம்பியன்ஷிப் மற்றும் முதல் இடம் பிடித்தமைக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.