சென்னை: மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின்
பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.துறை மாவட்ட தலைவர் பா.ராஜலட்சுமி அவர்கள் தலைமையில் சூளையில் பகுதியிலுள்ள உள்ள தனியார் விடுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். எஸ்.சி துறை மாநில துணை தலைவர் நிலவன் மற்றும் மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் உமா பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்க நிகழ்வாக மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து மடல் கவிதை வாசிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திர சிவம், எழும்பூர் 1வது சர்க்கிள் தலைவர் எம்.டி.சூர்யா, எஸ்.சி.துறை மாநில துணைத்தலைவர் புரசை வின்சென்ட், மாநில நிர்வாகிகளான மஞ்சுளா, மாலதி, மாணவர் காங்கிரஸ் நிர்வாகி நாகேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்கள்.

இதனை தொடர்ந்து அவரின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கேக் வேட்டி மகிழ்ந்தனர்.
மேலும் 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவியாக புடவை மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் எஸ்.சி.துறை மாவட்டத் துணைத் தலைவர்கள் தயாநிதி, செல்வி, அம்மு, மாவட்ட பொது செயலாளர்கள் சுமதி ஏழுமலை, டில்லிபாபு, எஸ்.சி துறை பகுதி தலைவர்கள் இ.பி.பிரவீன்குமார், ரூபன் ஸ்ரீ, லஷ்மி, வட்ட தலைவர் மன்மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.