சென்னை சமூக பணி கல்லூரியின் முதுகலை சமூக (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்தல்) துறை தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறன் படைத்தோருக்கு வெள்ள நிவாரண உதவி!

பெரும்பாக்கம்:
சென்னை சமூக பணி கல்லூரியின் முதுகலை சமூக (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்தல்) துறை சார்பில் மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் பெரும்பக்கம் மீள்குடியேற்ற இருப்பிடத்தில் மாற்றுத்திறன் படைத்தோருக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் சமர்பனா என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 5,00,000/- மதிப்புள்ள வெள்ள நிவாரண அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் டிசம்பர் 3 இயக்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் விநியோகிக்கப்பட்டன.

மேலும் குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள், ரேஷன் மற்றும் சுகாதாரப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

இதன் நிவாரண உதவிகள் மூலம் பெரும்பாக்கத்தில் உள்ள சுமார் 450க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் பயன்பெற்றன.