சென்னை: தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் இதன் நிறுவன தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இன்றைய சூழலில், இந்தியாவை ஆளும், ஆள்கின் ற தலைவர்கள் கட்சிகள் மக்களை ஏமாற்றி சுரண்டியும், கட்சி, ஆட்சி, அதிகாரம் என்று வளர்த்தும் சுய லாப நோக்குடன் குடும்ப அரசியல் என்று கார்ப்பரேட் அரசியல் செய்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் நாளை இந்தியாவை விற்பதற்கும் தயங்க மாட்டார்கள். அதனால் இந்தியா விற்பனைக்கு அல்ல,

முன்னோர்கள் தங்கள் வாழ்வாதாரம், உடமைகளை இழந்து ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவை மீட்டு எடுத்தனர். அவ்வாறு இருக்க நாம் இந்தியாவை காக்க வேண்டிய கடமை உள்ளது. இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.

இந்திய அரசியலமைப்பை காக்க வேண்டிய கடமை உள்ளது. சர்வாதிகார போக்கை தடுக்க வேண்டும்.

இந்தியா விற்பனைக்கு அல்ல என்னும் கொள்கை கொண்டு வரும் 2024, நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு 39 + 1 பாண்டிச்சேரி தொகுதிகளில் ஒத்த கருத்துடைய அனைத்து கட்சி, அமைப்புகள் ஒன்றிணைந்து களம் காண்பது என்று தீர்மானம் மேற்கொள்ளபட்டது.

மேலும் இதில் பேராசிரியர் ஆர்.சர்மா செல்வராஜ், சிவஞான சம்பந்தன், தனசேகரன், செந்தில் முருகன், பாக்கியமுத்து, சலீம், ராமா ராவ், ஹேமந்த் குமார், கண்ணன், பூர்வகுடி தமிழர் கட்சி தலைவர், எஸ். பன்னீர்செல்வம், நாடாளும் மக்கள் கட்சி அக்னி செல்வராஜ், தேசிய மக்கள் கட்சி தலைவர், சேம நாராயணன், மக்கள் உரிமை கழகம் ஏ.சு.மணி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி பிரபாகரன், காஞ்சனா, அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேஷ், மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க தலைவி கீதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தனர்.