திருவள்ளூர்:பெருமாள்பட்டில் உள்ள ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை படித்த 15,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அவரவர் வழியில் பிரிந்து சென்றுவிட்டனர். அவர்களில் பலர் உயர் கல்வி கற்று அரசு மற்றும் தனியார் துறைகளில், பணியாற்றிக் கொண்டு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக வரவேற்பு பாடலை முதலாம் ஆண்டு மாணவிகள் மைத்ரேயி, நந்தினி, ஹரிபிரியா மற்றும் ஓஜஸ்வினி சிறப்பாக பாடினார்.

இந்நிகழ்வின் அடுத்த நிகழ்வாக ஶ்ரீராம் கல்வி அறக்கட்டளை முனைவர் நாராயணசாமி அவர்கள் நான்கு புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களான
பி. சிவகுமார் B. E. (EEE) 1997 கணக்கு டெலிவரி மேலாளர் DXC டெக்னாலஜிஸ், எம். ஸ்ரீனிவாசன் B. E. (ஆட்டோமொபைல்) 2007 விஞ்ஞானி துணை இயக்குனர், CVRDE, DRDO பாதுகாப்பு அமைச்சகம், என். எஸ். செந்தூரன் பி. இ. (EEE) 2002 சீனியர் ஜெனரல் மேலாளர் மற்றும் தலைமை உற்பத்திக் குழு சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட். லிமிடெட் மற்றும் விஜயலட்சுமி. எம் பி.டெக். (வேதியியல்) 2005 மனிதவள மேலாளர் கேப்ஜெமினி டெக்னாலஜி சர்வீசஸ் இந்தியா லிமிடெட். ஆகியோருக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

மேலும் ஶ்ரீராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி. பி.
கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் அவர் பேசியதாவது : கடந்த 1995 ஆம் ஆண்டு தொடங்கிய இக்கல்லூரியானது பல்கலைக்கழக அளவில் தங்க பதக்கம் வென்ற பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளது . காவல் துறை, ஆராய்ச்சி துறை, அரசியல் மற்றும் தொழில் துறை என எண்ணற்ற துறைகளில் முன்னாள் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர் என பேசினார்.
அடுத்ததாக பேசிய ஶ்ரீ ராம் கல்வி அறக்கட்டளை தலைவர் முனைவர் நாராயணசாமி அவர்கள் சிறப்புரை வழங்கி பேசியதாவது ,
முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்போடு வருடம்தோறும் இதனை நடத்துகிறோம் என கூறினார்.மேலும் இந் நிகழ்ச்சியினை நல்ல முறையில் ஏற்பாடு செய்திருந்த அனைவரையும் பாராட்டினார்.

அடுத்ததாக முன்னாள் மாணவர்கள் தங்கள் கடந்தகால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டதுடன் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பல்வேறு விளையாட்டு போட்டிகளை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்ததுடன் அதில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
