அமமுக 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் எம். ஜி. ஆர்- ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய மத்திய சென்னை மேற்கு மாவட்ட கழக இணைச்செயலாளர்!
இராயப்பேட்டை:அம்மா மக்கள் முன்னேற்றக் மக்கள் கழகத்தின் 6 வது ஆண்டு தொடக்க விழா ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் நடந்தது.
இவ்விழாவில் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அவர்கள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி மரியாதை செலுத்தினார். அதன்பின் 70 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றி,கழக தொண்டர் களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் வழக்கறிஞரும், அமமுக மத்திய சென்னை மேற்கு மாவட்ட கழக இணைச்செயலாளருமான அங்காள பரமேஸ்வரி அவர்கள் கலந்துக்கொண்டு தலைமை கழகத்தில் அலங்கரிக்கப்பட்ட இருபெரும் ஆளுமைகளாக விளங்கிய எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.
