முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நிகழ்வு!

சென்னை:
முன்னாள் காங்கிரஸ் தலைவரும், இலக்கிய செல்வருமான குமரி அனந்தன் அவர்களின் 91 வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் முன்னாள் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் ஆர். ராஜகோபால் ஐ.ஏ.எஸ் மற்றும்
இந்திய கம்யூனி்ஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் மா. வே. மலையராஜா ஆகியோர் கே. எஸ்.அழகிரி அவர்கள் முன்னிலையில் காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மேலும் மலையராஜா அவர்கள் தலைமையில் கே.செல்வம்,
வி.டேவிட்ராஜ், ஜே.சகாயமேரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்கிரஸில் இணைத்துக்
கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களான கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர்,மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளான பி. சுரேஷ்பாபு, சூளை ராஜேந்திரன், பா.சந்திரசேகர் சேத்துப்பட்டு ராஜா, கே. எம்.கார்டன் நித்தியானந்தம், கே.வி.கோபிநாத், சி.பி.நரேஷ் குமார்,மணிகண்டன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.