சென்னை : ஊன் உடை உறைவிடம் தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள சாலையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு நடைபெற்றது .

இந்த கொரோனா விழிப்புணர்வு ஒவியத்தை அறக்கட்டளையின் நிர்வாகி ரகு மற்றும் குழுவினர் சிறப்பாக வரைந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை உன் உடை உறைவிடம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரபாகரன் அவர்கள் ஒருங்கிணைத்து சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் அவர் இந்த கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியம் மருத்துவத் துறையினர், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் பத்திரிக்கை மற்றும் ஊடக துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வரையப்பட்டதாகவும் தெரிவித்தார்.
