திரிசூலம் : பட்டாளம் ஜெயின் சங்கம் சார்பில் கொரோனா தொற்று பாதிப்பினால் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் , வருமானமின்றி அவதி (கவலை) பட்டு வரும் நிலையில் சமூக அக்கறையுடனும் ஜாதி, மத பேதமில்லாமலும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, எண்ணெய்,பருப்பு, ரவை போன்ற பொருட்களை சென்னை திரிசூலத்தில் உள்ள சிவன் கோயில் அருகில் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த சுமார் 200 நபர்களுக்கு பட்டாளம் ஜெயின் சங்கத்தின் நிர்வாகிகளான அஜீத் லோடா,சாந்திலால், ஷோபா, விகாஷ் பர்மார் மற்றும் முகேஷ் சுரானா ஆகியோர் அத்தியாவசிய பொருட்களை
வழங்கினார்கள்.

இதற்கு காவல்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் தெரிவித்தனர். மேலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாளிலிருந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் தேவை அறிந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.