சென்னை – பழவந்தாங்கல் தலக்கனாஞ்சேரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளர் ஹரிகுமார் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பழவந்தாங்கல்
தலக்கனாஞ்சேரியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் போலிப்பட்டா தயார் செய்து உள்ளார் என தாசில்தார் அலுவலகத்திலும் சி.சி.பியிலும் புகாரளித்துள்ள நிலையில்,
சென்னை நங்கநல்லூரை சேர்ந்த மோகன், ரங்கநாயகி உள்ளிட்ட சிலர் தங்களுக்கு சொந்தமான நிலத்திற்கு நாராயணன் என்பவர் போலிப்பட்டா தயார் செய்து உள்ளார் என புகார் அளித்த நிலையில் விசாரணையில் உண்மை என தெரிய வர நாராயணன் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி அவருடைய சகோதரர் நாகராஜ் உள்ளிட்ட இன்னும் சிலரை
மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் நாராயணன் மீது குண்டாஸ் சட்டம் பாயலாம் எனவும் தகவல் இன்னும் பலர் புகார் அளித்து வருவதாகவும் தகவல்.
