சவுகார் பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் பள்ளியில் கல்விக் கண்காட்சி:
பல்வேறு மாதிரிகளை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்!

சென்னை : சென்னை சவுகார்பேட்டை
ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் வித்யாலாயா மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளியில் கல்விக்கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக பூக்கடை காவல் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் ஐ.பி.எஸ் , சென்னை மாநிலக் கல்லூரி உதவி
பேராசிரியை ஜெயந்தி ஆகியோருடன்
பள்ளியின் தாளாளர் அஜய்குமார் சோர்டியா, பொருளாளர் கியான் சோர்டியா, செயலாளர் சுரேஷ் சந்த் சோர்டியா மற்றும் பள்ளி முதல்வர் திருமதி மாலினி ஆகியோர் இணைந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.

இக் கண்காட்சி அரங்கு நுழைவாயிலில் ரயில் பெட்டி மாதிரி பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதன் உள்ளே கடல் அருங்காட்சியகம் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருந்தது.
கடல் கன்னியும், கடல்வாழ் உயிரினங்களும், கடல்சார் உயிரினங்களும், தாவரங்களும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் பழங்கால விவசாய முறைகளும், நவீன கால விவசாய முறையை விளக்கும் மாதிரிகள் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தன.

விண்வெளியில் இருக்கிறோமா இல்ல ஸ்ரீ பி.எஸ்.சி பள்ளியில் இருக்கிறோமா என்று நினைக்கும் அளவிற்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த
அறிவியல் மாதிரி கண்காட்சி கூடம் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.

சூரிய குடும்பம், நட்சத்திரக்கூட்டம்,துணைக்கோள்கள் என விண்வெளி அறிவியலை பறைசாற்றும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

முதல் மாடியில் எல்கேஜி, யு.கே.ஜி குழந்தைகள் அறிவியல் அறிஞர்களின் முகத்துடன் முகமூடி அணிந்து பார்வையாளர்களை வரவேற்றனர்.

ஸ்ரீ பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுழற்றியும், மாணவிகள் நடனமாடியும் அசத்தினர்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் விளையும் தீமைகளை எடுத்துக் கூறும் விதமாக அவநயம் (Mime) மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இரண்டாவது மாடியில் தமிழ் வரலாற்றுச் சிறப்புக் கூடங்களும் முப்பரிமாண கூடம்,சிறுதானியங்கள் கூடம் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள்,பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சார்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்களும் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.