சர்வதேச அளவில் சதுரங்க விளையாட்டில் சாதனை படைத்து அர்ஜுனா விருது பெற்ற பிரக்ஞானந்தாவிற்குப் பிரமாண்ட பாராட்டு விழா!
சென்னை:முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் மதிப்புமிக்க அர்ஜுனா விருதைப் பெற்றதற்க்காக செஸ் கிராண்ட் மாஸ்டர் ஜி.எம்.ஆர். பிரக்ஞானந்தாவிற்கு பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி சமீபத்தில் டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் வழங்கும் -2022 விழாவில் , ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதைப் பெற்றமைக்காக நடைபெற்றது.

இவ்விழாவிற்குத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு. சிவ.மெய்யநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு மற்றும் அம்பத்தூர் சட்ட உறுப்பினர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் சதுரங்கப் போட்டியின் அடையாளமாகத் திகழும் வீரருக்குப் பள்ளியின் மூலம் வழங்கப்படும் ரூபாய் 7 இலட்சம் பரிசுத் தொகையினையும் வழங்கி பாராட்டி பெருமைப்படுத்தப்பட்டது.

சர்வதேச அளவில் அளப்பரிய சாதனை படைத்த மாணவனைப் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

