சென்னை:
மறைந்த முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளையபெருமாள் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்கள் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்களான கோபண்ணா,பொன்.கிருஷ்ணமூர்த்தி,
மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் சுதா ராமகிருஷ்ணன்,சமூக ஊடக பிரிவு தலைவர் கே.டி.லட்சுமிகாந்த் ஆகியோர் கலந்துக் கொண்டு புகழ் மரியாதை செய்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் மாநில செயலாளர் அயன்புரம் சரவணன்,
கவுன்சிலர் தனலட்சுமி சரவணன்,
மத்திய சென்னை மேற்கு மாவட்ட
பொதுச்செயலாளர் முனைவர் எஸ். கே. உமாபாலன்,நிலவன்,மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் துஹினா சந்திரசேகர் ,சர்க்கிள் தலைவர் எம். டி. சூர்யா,வட்ட தலைவர்களான செல்வம்
குபேந்திரன்,மன்மதன்
மாவட்ட பொதுச்செயலாளர் சுமதி, எழும்பூர் பகுதி மகளிரணி
தலைவர் பா.ராஜலட்சுமி,தேவி
உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.