நுங்கம்பாக்கம்: பாலகிருஷணன் அறக்கட்டளை சார்பில் மறைந்த பரத் பாலகிருஷ்ணன் அவர்களின் நினைவை போற்றும் வகையிலும், அவரின் பிறந்தநாளை சிறப்பிக்கும்
வகையில் பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினம்-2022 என்கிற நிகழ்வு சென்னை நுங்கம்பாக்கத்தில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள்
தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் கல்வியில் சிறந்து விளங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை ,எளியமாணவ-மாணவிகளுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வெகுமதி (Education Scholarship Reward) வழங்கும் நிகழ்வில் சுதா சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் கிளமெண்ட் வில்லியம்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கல்விக்கான ஊக்கத் தொகை வெகுமதியை வழங்கினர்.

மேலும் இந்த நிகழ்வில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

