தேனாம்பேட்டை:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் தேனாம்பேட்டையிலுள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைப்பெற்றது. மேலும் மாநில செயற்குழு முடிவின்படி அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் உள்ள செல்போன்களை ஒப்படைப்பது, இயக்குனர் அலுவலக வளாகத்தின் உள்ளே காத்திருப்பு போராட்டம் நடத்துவது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.

இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மாநில செயளாலர்கள் பி.சித்ர செல்வி , எஸ் .ஹேமபிரியா , மாவட்ட தலைவர் கே. நிர்மலா , செயலாளர் ஸ்ரீதேவி , பொருளாலர் விஜயலஷ்மி மற்றும் மாவட்ட நிர்வாகிகளான சாந்தா , முனீஸ்வரி , சுஜாதா, சங்கீதா , சுதா , சாந்தி, மீனாட்சி , ஆரோக்கியமேரி, ஜெயலஷ்மி உள்பட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.