இளம் உலக கின்னஸ் சாதனையாளர்கள் வீரஜெயந்தன் மற்றும் கிரிஷ் ஜெய் ஆகியோர் உலக கின்னஸ் சாதனையை பாராட்டிய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி!
விழுப்புரம்:இளம் உலக கின்னஸ் சாதனையாளர்களான வீரஜெயந்தன் மற்றும் கிரிஷ் ஜெய் சகோதர்களின் உலக கின்னஸ் சாதனையை பாராட்டிய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், பிஜேபி மாநில தலைவருமான அண்ணாமலை அவர்கள் பாராட்டி மகிழ்வித்தார்.

இந்நிகழ்வில் பி.ஜே.பி
மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் “அறியப்படாத அதிசய மனிதர்” என்கிற தலைப்பில் சமூக வலைதளத்தில் வெளிவரும் தொடரில் இந்த இரண்டு மாணவர்களையும் பாராட்டி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் சாதனைகள்:
கடந்த 2023 ஆம் ஆண்டு 1200 ரூபிக் க்யூப்களை கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வரைபடத்தினை 1.15 மணி நேரத்தில் 6 அடி உயரத்திற்கு வரைபடத்தினை வரைந்தனர். அதற்கு கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இன்ஜினியஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளனர்.

மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு 1000 ரூபிக் க்யூப்களை கொண்டு 1.20 நிமிடத்தில் 6 அடி உயரத்திற்கு நடிகர் விஜய் அவர்களின் வரைபடத்தினை வரைந்தனர்.
2022 ஆம் ஆண்டு ரூபிக் க்யூப்களை கொண்டு ஒரு நிமிடத்தில் உலக கின்னஸ் படைத்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு Blind of fold பிரிவில் ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதை பெற்றனர்.
மேலும் இந்த மாணவர்கள் கின்னஸ் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் மற்றும் புக் ஆஃப் இன்ஜினியஸ் (Ingenious Charm of World Record) இன்னும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
