சென்னை:தமிழ்த் திரையுலகில் நடிப்பு, எழுத்து, இசை மற்றும் பொது வாழ்வு என தனக்கென முத்திரை பதித்தும், அர்ப்பணிப்பு உணர்வோடும் வலம் வரும் மனித நேயர் கே. பாக்யராஜ் அவர்களின் பிறந்த நாள் விழா அண்ணாசாலை ராணி சீதை அரங்கத்தில் நடைப்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வரும் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், சமூக சேவையாளருமான முனைவர் கிங்மேக்கர்ஸ் ராஜசேகர் அவர்கள் கலைமாமணி மணவை பொன். மாணிக்கம் அவர்கள் எழுதிய ”யாரோ சொன்னாங்க” என்னும் வாழ்வியல் சிந்தனைகள் உள்ளடக்கிய புத்தகத்தை கே.பாக்யராஜ் அவர்கள் வெளியிட எஸ்.ராஜசேகர் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

மேலும் இயக்குநர்கள் இன்ப திருநாள் நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதி ராஜா, கலைஞானம்,நல்லி குப்புசாமி செட்டியார், கவிஞர் முத்து ராமலிங்கம் பார்த்திபன், பாண்டியராஜன்,சின்னி ஜெயந்த் இசையமைப்பாளர் தேவா, லிங்குசாமி, சரண், மயில்சாமி, கே. ராஜன், தம்பி ராமைய்யா, வேல்ஸ் ஐசரி கணேஷ்,எடிட்டர் மோகன், சீனு ராமசாமி மற்றும் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

