சென்னை:
இயக்குனர் பார்த்திபன் அவர்கள் நடித்து இயக்கிய ‘இரவின் நிழல்’ படத்திற்க்கு லிங்கன் உலக சாதனை அமைப்பு அங்கீகாரம் வழங்கி கவுரவித்தது. இதனை ப்ளூ சட்டை மாறன் சமீப காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இது குறித்து சோசியல் ப்ரோட்டக்ஷன் மற்றும் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம் ” அப்போது அவர் பேசுகையில் இந்த ஊக்குவிப்பு பணியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறோம். எங்கள் நோக்கம் திறமையாளர்களின் சாதனைகளை கண்டுபிடித்து ஊக்குவிப்பது, சாதனை செய்ய ஊக்குவிப்பதுதான்
எங்கள் இந்த ஊக்குவிப்பு பயணத்தில் ஒரு தமிழனாக பார்த்திபன் சார் அவர்களை கவுரவித்தது மகிழ்ச்சி. சமுத்திரத்தின் துளி மழை போல தான் இந்த வாழ்த்துக்கள். நிச்சயமாக பல உயரிய விருதுகளை இரவின் நிழல் அள்ளும். இந்த விமர்சனத்திருக்கு பிறகு தனிப்பட்ட முறையில் சில போலி கணக்குகள் மூலமாக தவறாக சிலர் பதிவிட்டு வருவதாக கூறினார்.
சிங்கப்பூர், துபாய், மலேசியா என சர்வதேச அளவில் திறமையாளர்களை ஊக்குவிக்கும் ஒரு நிறுவனம் குரோம்பேட்டையில் இயங்குவது பெருமைத்தான். இதுவரை 3000 பேருக்கும் மேல் கவுரவித்த போது கிடைக்காத வெளிச்சம் தற்போது கிடைத்துள்ளது மகிழ்ச்சிதான், எங்களுடைய ஊக்குவிப்பு பணி தொடரும்.இன்று பெரிய அமைப்பு என மற்றுமொரு உலக சாதனை அமைப்பினை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் அவர்கள் வஞ்ச புகழ்ச்சி அணியில் பேசினார்.
அதே போல் உலகே வியந்து வாழ்த்து சொல்லும் நிலைக்கு வருவோம் இது உறுதி 4 பேரை விமர்சித்து Youtube நடத்தும் அவரே மகிழ்ச்சியாக இருக்கும் போது 4000 பேருக்கும் மேல் ஊக்குவித்து கொண்டிருக்கும் எங்களுக்கு இந்த விமர்சனம் பொருட்டல்ல! இந்த சூழலில் துணையாக நிற்கும் எங்களது சாதனையாளர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி, யாவருக்கும், யாவற்றிற்கும் நன்றி” என தெரிவித்தார்.
