ஜமீன் பல்லாவரம் :
சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள வேல்ஸ் கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வரும் முனைவர் எம்.ஆர் சித்ரா மை என்பவர் 2021 செப்டம்பர் 3 அன்று காலை 8:10 முதல் மாலை 6:10 மணி வரை உலகில் முதன் முறையாக உலக சினிமா, இந்தி சினிமா, தமிழ் சினிமாவில் 1906 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை திரைப்படங்களில் சுமார் 115 ஆண்டுகளாக பயன்படுத்தபட்டு வரும் தொழிற் நுட்பங்களை குறித்து தொடர்ந்து 10 மணி நேரம் பேசி புதிய உலக சாதனை படைத்தார்.

இவரின் இந்த உலக சாதனையை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் அங்கிகரித்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்த்திக்குமார் அவர்கள் பதக்கம் அணிவித்தார். தலைமை நிர்வாக அதிகாரி செல்வம் உமா இந்த நிகழ்ச்சியை ஆய்வு செய்தார். நிறுவன நிர்வாகிகள் ஸ்டீபன் சீனிவாசன், சாலமன் தினேஷ் ஆகியோர் பரிசு உபகரணங்கள் வழங்கினார்.

இந்த உலக சாதனை நிகழ்வில் தமிழ் திரைப்பட நடிகர் பாண்டியராஜன், வேல்ஸ் பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் முனைவர். ஸ்ரீமன் நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பத்ம பிரியா, யுவராஜ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளை சேது ஆகியோர் கலந்து கொண்டு விழாவிற்கு மேலும் பெருமை சேர்த்தனர்.

மேலும் இந் நிகழ்வில் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளான ஹரிஹரன், இலக்கியா,சஞ்சய், ஐஸ்வர்யா மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
