சென்னை :கிரீன் ப்யூச்சர் (GREEN FUTURE) நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா மற்றும் நிறுவனத்தின் புதிய பண்னை நில திட்டம் அறிமுக விழா சென்னை தனியார் நட்சத்திர ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் அகில இந்திய தேசிய் ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஆ.ஹென்றி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக கல்வி பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவித்தார் மேலும் நிறுவனத்தின் புதிய பண்ணை நிலத்தின் முதல் கையேட்டினை வெளியிட்டார்.

இவ்விழாவிற்கு கிரீன் ப்யூச்சர் (Green Future) நிறுவனத் தலைவர் வி.முத்து அவர்கள் தலைமை தாங்கினார். க்ரீன் ப்யூச்சர் நிறுவனத்தின் சேர்மன் ஜெ.தீபா அவர்கள் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் Green Future நிறுவனத்தின் சேர்மன் ஜெ.தீபா அவர்களுக்கு சாதனைப் பெண்மணி விருதும். Green Future நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரா.கார்த்திக் அவர்களுக்கு இளைய நாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பணியாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இவ்விழாவில் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குனர் கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
