இந்திய மாலுமிகள் நல அமைப்பு(ISWOT) சார்பில் உலக கடல்சார் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு

சென்னை:இந்திய மாலுமிகள் நல அமைப்பு(ISWOT) சார்பில் உலக கடல்சார் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் இந்த அமைப்பின் தலைவர் பாபு மைலன் அவர் கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமைப்பின் துணைத்தலைவர் Fr. ஆண்டனி வரவேற்புரை வழங்கினார். செயலாளர் ஜெஸ்ஸிலீன் முன்னிலை வகித்தார்.மேலும் இந்த நிகழ்வில் விசிக தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல் . திருமாவளவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் திருமாவளவன் அவர்களுக்கு சிறந்த ஆளுமை திறன் மற்றும் வாழும் அம்பேத்கர் உள்ளிட்ட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் சமூக நீதி பேரவையின் தலைவர் பால்ராஜ் குணா மற்றும் இந்திய மாலுமிகள் நல அமைப்பின் நிர்வாகிகள், கடற்படை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திறளாக கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வின் இறுதியாக திருமாவளவன் அவர்கள் தனது சிறப்புரையில் பேசியதாவது : பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தங்கள் அமைப்பின் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய தீர்வு காண முயற்சி எடுப்பேன் என்றும்,
பாராளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களைப் பேசுவது, அதுவும் ஒன்றிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் பிரதிநிதி எடுத்துச் சொல்வது எத்தனை கடினமான பணி என்பதை விரிவாக எடுத்துச் சொன்னார்.