பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன் விழா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு நுங்கம்பாக்கம் தனியார் விடுதியில் நடைபெற்றது.

மேலும் பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் ஊடகப்பிரிவு தலைவர் பி.கே.கருணா அவர்கள் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:தமிழ்நாட்டில் பிரம்ம குமாரிகள் இயக்கம் தனது சேவையின் பொன்விழாவை கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் 147 நாடுகளில் இந்த இயக்கம் இயங்கி வருகிறது. 1936 ஆம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. 85 வருடங்களாக சேவை செய்து வருகிறது. கடவுள் ஒருவரே என்ற அடிப்படையில் மக்களிடம் அந்த செய்தியை கொண்டு சேர்த்து வருகிறோம் இந்த உலகில் எத்தனையோ மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தாலும் இந்தியாவில் தான் மிகப்பழமையான ஆதிசனாதன தேவி தேவதா கலாச்சாரம் இருந்து வந்தது .இதன் முக்கிய அம்சங்கள் கடவுள் ஒருவரே என்பதாகும் .

மேலும் கடவுள் ஒளிமயமானவர் என்பதாகும் .அதனால் தான் நாம் ஜோதிர்லிங்க வழிபாடு செய்து வருகிறோம் .மேலும் பஞ்ச பூதங்களால் ஆன உலகம் ஒன்று என்ற கொள்கைகளை நாங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம் உலகம் முழுவதும் 21 லட்சம் குடும்பங்கள் இந்த ஞானத்தை கேட்டு பலனை பெற்று வருகிறார்கள் உலக மக்கள் அனைவரும் அன்பு ,மகிழ்ச்சி, அமைதியை தான் விரும்புகிறார்கள். மக்களின் இன்றைய கல்விமுறையில் வாழ்வியல் நெறிமுறைகளை விட பணம் சம்பாதிக்கும் நோக்கம் தான் அதிகமாக உள்ளது. ‘அதனால் தான் இங்கிருந்து கூட பலர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால் பிரம்மா குமாரிகள் இயக்கம் குரு- சிஷ்யன் என்று இல்லாமல் அனைவரும் கடவுளின் மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த கல்வியை அளித்து வருகிறோம்.

மக்கள் அனைவரும் அமைதி, அன்பு மகிழ்ச்சியைத் தான் விரும்புகிறார்கள். அவர்கள் மன உறுதியை பெறுவதற்காக இந்த ராஜ யோக தியானத்தை எளிமையான முறையில் பயிற்சி அளிக்கிறோம்.

எங்களது கிளை நிலையங்கள் சென்னை, நியூயார்க் என பெரிய நகரங்களில் எல்லாம் உள்ளன .இந்த நிலையங்ளை இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்ல விரும்புகிறோம். தமிழ்நாட்டில் 350 ராஜயோக தியான பயிற்சி மையங்கள் உள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் பயன் அடைந்து வருகின்றனர் என்று கூறினார். பிர