இராயபுரம்: பெருநகர சென்னை மாநகராட்சி காப்பக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ் ஆர்.எம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 4M தொண்டு நிறுவன மேலாளர் பெரியதம்பி அவர்கள் தலைமையில் போதை பொருளின் பாதிப்புகள் குறித்து புள்ளி விவரங்களுடன் விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட காவல்துறை ஆய்வாளர் மங்களம் அவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வை பற்றி சிறப்புரை ஆற்றினார்.

இதில் பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் ஒயிலாட்டம், வீதி நாடகம், பொம்மை நடனம் உள்ளிட்டவைகள் மூலம் மக்களிடையே போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

4M தொண்டு நிறுவன மகளிர் சுய உதவிக்குழு வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரமிளா அவர்கள் போதைப் பொருளின் பாதிப்புகள் வெளிப்படுத்தக்கூடிய கண்காட்சியை திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி காப்பக இணை ஒருங்கிணைப்பாளர் மெர்லின் சிங் அவர்களால் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 250 பேர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை காப்பக ஒருங்கிணைப்பாளர்கள்,4M தொண்டு நிறுவனம்
கார்த்திகா,இந்தியா தொண்டு நிறுவனம் -சூர்யா, ரோஜா வனத் தொண்டு நிறுவனம்-ஹரி பிரசாத் -சேவ் தொண்டு நிறுவனம் -விஜய் ஆகியோர் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.