கிளாம்பாக்கம்:
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் ரியல் அறக்கட்டளை சார்பில் உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திட்ட இயக்குனர் திரு லாரன்ஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட எய்ட்ஸ் திட்ட மேலாளர் திருமதி. பேபி, திருமதி.பபிதா,
மாவட்ட வருவாய் அலுவலகம் குழு, திரு.அருள்மணி அசிஸ்டன்ட் பிளானர் திரு. ரமேஷ், மற்றும் பூங்கோதை மாவட்ட காச நோய் பிரிவு திரு. பாஸ்கர், வழக்கறிஞர் திருமதி. மனோகரி, பேராசிரியர்கள் வான்வகுலாதேவி, மணிமாலா, மற்றும் புனிதவதி,
மொபைல் மெடிக்கல் டீம் திரு அயுப்கான் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இதில் பாரத் நர்சிங் கல்லூரி மற்றும் வெங்கடேஷ்வரா நர்சிங் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்டடோர் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி மாநகரப் பேருந்துகள் செல்லும் வழித்தடம் வரை எச்ஐவி தடுப்பதற்கான விளக்கங்களை உரத்த குரலில் முழங்கிக் கொண்டே வந்தனர்.

இப்பேரணியின் வழியே
துண்டு பிரச்சுரம் பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம், செய்யப்பட்டது.

எச்ஐவி பரவும் மற்றும் பரவா முறைகள் குறித்து மாணவ மாணவிகள் மக்களை ஈர்க்கும் வகையில் ஊமை விழிப்புணர்வு நாடகம் என்று சொல்லப்படும் மைம் ஷோ வழியே நடத்தை மாற்றத்திற்கான அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

வீதி நாடகம் மற்றும் விழிப்புணர்வு நடனம் மூலமாக இளையோருக்கான வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

எச்ஐவி /எய்ட்ஸின் குறியீடான ரெட் ரிப்பன் மாணவர்கள் குழுவாக இணைந்து காட்டினார்கள்..

எச்ஐவி எய்ட்சில்லா உலகை உருவாக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இரண்டு விழிப்புணர்வு விளக்கப்பட போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

விழிப்புணர்வு வாசகத்துடன் ரங்கோலி கோலமும் பேருந்து நிலையத்தில் வரையப்பட்டன..

எய்ட்ஸ் உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.. மாணவ மாணவிகளுக்கு மற்றும் பயணிகள் பொதுமக்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் தங்களது சிறப்புரையில் எச்ஐவி/எய்ட்ஸின் புள்ளி விவரங்கள் முதல் இன்றைய சூழலில் மனித சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய, தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.. இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், வெற்றியாளர்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி ஐ சி திட்டத்தின் மேலாளர் திரு மணிகண்டன் உள்ளிட்ட பணியாளர்கள் குழுவாக இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.