நாமக்கல் மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய சமூக நீதி ஆட்சியில் நாமக்கல் தொகுதிகளைக் தமிழ்ப்புலிகள் கட்சியை புறக்கணித்தது ஏன்.?

நாமக்கல்: கடந்த 09.11.2025
நாமக்கல் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.
ராஜேஷ்குமார்
அவர்கள் தலைமையில் எஸ்ஐஆர் திருத்தச் சட்டத்தை நாமக்கல் தொகுதியில் எவ்வாறு கையாள வேண்டும் என்று இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சி மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முடிவில் இந்தியா கூட்டணி தலைமையில் எதிர்வரும் 11.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக நீதி ஆட்சி என்று சொல்லக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி மாவட்ட செயலாளர்களைஅழைத்து
எஸ்ஐஆர் பற்றிய ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்துப் பேசிய திராவிட முன்னேற்ற கழக மாவட்ட தலைமை தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் முனைவர் த. குமரவேல் அவர்களை புறக்கணித்தது என்பது பொது மக்களுடைய பிரச்சினைகளை பொதுவெளியில் கொண்டு வந்து போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக ஆளுகின்ற ஆட்சிக்கு பின்னடைவை சந்திக்கக்கூடிய வேலையை செய்கிறார் என்கிற தவறான புரிதலை கொண்டதன் அடிப்படையிலா? அல்லது பட்டியலின மக்கள் வாழ்ந்து வரக்கூடிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை கூட தற்போது வரை நாமக்கல் தொகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் செய்து கொடுக்க முன்வரவில்லை என்பதை வெளிப்படுத்தியதன் காரணமாக வா.? அல்லது சாதிய பார்வையா…?
பொதுமக்களுடைய குறிப்பாக பட்டியலின மக்களுடைய பிரச்சனைகளை தொடர்ந்து கையாண்டு இது சம்பந்தமான பல போராட்டங்களை எடுத்ததன் விளைவாக புறக்கணிக்கப்பட்டார் என்று சொன்னால் இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சமூக நீதி பார்வையா..? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் அண்மையில் நடந்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் பொது நிகழ்வில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் அமைச்சர் மாண்புமிகு. டாக்டர் மதிவேந்தன் அவர்கள் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதைத்தொடர்ந்து தற்போது பட்டியலின மக்களுடைய பிரச்சனைகளை தொடர்ந்து கையாண்டு களத்திலே நின்று குறளற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க கூடிய தமிழ்ப்புலிகள் கட்சியினுடைய நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் டாக்டர். குமரவேல் அவர்களை புறக்கணித்த இந்த பாராமுக செயல் என்பது திட்டமிட்டே நாமக்கல் மாவட்டத்தில் சாதிய தன்மையோடு, சாதிய பார்வையில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

நாமக்கல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை என்று சொல்லக்கூடிய இப்பகுதிகளில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது பின்னடைவை சந்திக்கப் போகிறது என்பதை உறுதிபட சொல்ல முடியும்.

குறிப்பாக நாமக்கல் தொகுதி மிகப்பெரிய பின்னடைவு சந்திக்கும் ஏனென்றால் தொடர்ந்து மக்களோடு மக்களாக பல பகுதியில் உள்ள பிரச்சனைகளையும் பல்வேறு நிலைப்பாடு தன்மைகளையும் நான் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதனால் நான் உறுதியுடன் என்னால் சொல்ல முடியும்.. இதனை சீர்படுத்திக் கொள்ளாவிட்டால் நிச்சயமாக நாமக்கல் தொகுதி எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி என்பது கேள்விக்குறியே?
நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போது அதே சமுதாயத்தைச் சார்ந்தவர் தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதியின் மாவட்டச் செயலாளர் டாக்டர் குமரவேல் புறக்கணிக்கப்பட்ட செய்தி என்பது தொடர்ந்து இச்சமுதாயத்தை புறக்கணிக்க திராவிட முன்னேற்ற கழகம் திட்டமிட்டுள்ளது என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது…

(முனைவர் த. குமரவேல் MBA(Hr).,D.L.L.A.L.,DCA.,F.AID.,L.L.B
மாவட்டச் செயலாளர்
தமிழ்ப்புலிகள் கட்சி
நாமக்கல் தொகுதி)