சென்னை:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் – 2025 தினவிழா கொண்டாட்டம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலும், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, இ.ஆ.ப அவர்கள் முன்னிலையிலும் சிறப்புற நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஓசை தொண்டு நிறுவன தலைவர் விஜீ சின்னசாமி அவர்களுக்கு சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருதும்,ஒரு லட்சம் ஊக்கத்தொகை யும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் ஓசை தொண்டு நிறுவன நிர்வாகி முனைவர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

