சென்னை:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் – 2025 விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலும், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, இ.ஆ.ப அவர்கள் முன்னிலையிலும் சிறப்புற நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த கிராமியம் தொண்டு நிறுவன தலைவர் முனைவர். போ. நாராயணன் அவர்களுக்கு சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருதும்,ஒரு லட்சம் ஊக்க தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு அரசின் சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருதுப் பெற்ற முனைவர் போ. நாராயணன் அவர்களுக்கு இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ஐசிடபிள்யு) சார்பில் பாராட்டு விழா சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இதன் நிறுவன செயலாளர் ஏ.ஜே. ஹரிஹரன் அவர்கள் ஏற்பாட்டில் சிறப்புற நடைப்பெற்றது.

மேலும் அவருக்கு பொன்னாடை அணிவித்தும்,பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கிராமியம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் நிர்வாகிகள்,சமூகப்பணி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.