சென்னை:நாடாளும் மக்கள் கட்சியின்  10வது மாநில பொதுக்குழு கூட்டம் இதன் தேசியத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசு அவர்கள் தலைமையில் சென்னை  வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

இந்த  பொதுக்குழுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பா.ஜெயக்குமார், மாநில பொருளாளர்பா.ஷோபனா,  மாநில அமைப்பாளர் ப.ராஜேந்திரன், புதுச்சேரி மாநில தலைவர் சா.கமலக்கண்ணன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கலைமாமணி வி.பி.மாணிக்கம், புதுச்சேரி மாநில துணைப் பொதுச்செயலாளர் ந.அண்ணாமலை, தமிழ்நாடு, மாநில அமைப்பு செயலாளர்கள் ர.மாரிதேவி மற்றும் ஆ.பாஸ்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர்கள் சு.தாமோதரன் மற்றும் ரவிசங்கர், மாநில மகளிர் அணி செயலாளர் ரா.சுசீலா, மாநில துணைத்தலைவர் கு.முத்துப்பாண்டி,சென்னை மண்டலத் தலைவர் ஆ.செல்வகுமரன், மாநில மகளிர் அணி துணைத்தலைவர் சுதா, சென்னை மாவட்ட துணைத் தலைவர் கு.ரஜினிகாந்த், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ர.தினேஷ்குமார், தேனி மாவட்டத் தலைவர் பொன்.செல்வம், தேனி மாவட்ட அமைப்பாளர் வீ.மணிகண்டன், கரூர் மாவட்ட செயலாளர் கண்ணன் என்கிற பால்சாமி, மாநில தொழிலாளர் அணி செயலாளர் ஆ.பழனிச்சாமி, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மா.தீபலட்சுமி, கரூர் மாவட்ட மகளிர் அணித்தலைவர் மா.மாரியாயி, மாநில தொழிலாளர் அணி துணைத்தலைவர் க.சுப்புகுட்டி, திண்டுக்கல் தெற்கு மாவட்டத் தலைவர் பொ.சந்திரசேகர், கரூர் மாவட்ட துணை செயலாளர்  தா.இளையராஜா, கரூர் மாவட்ட துணைத் தலைவர் மு.சிகாமணி, கொடைக்கானல் நகரத் தலைவர் மா.கருப்பசாமி, சென்னை மாவட்ட மகளிர் அணித்தலைவர் சுலோச்சனா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் இப்பொதுக்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பணம்பால் மற்றும் தென்னம்பால் இறக்க அனுமதிக்க வேண்டும். அதாவது, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.

தமிழ்நாட்டில், ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை, அனைத்துப் பள்ளிகளிலும் சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர் மற்றும் நாப்கின் வசதிகள் செய்து தர வேண்டும்.

கல்குவாரி மற்றும் மணல் குவாரி உட்பட அனைத்து கனிம வளங்கள் எடுக்கும் குவாரிகளை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை, டிரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்து, அதன் பதிவுகளை பொது வெளியில் வெளியிட வேண்டும். சமூக ஆர்வலர்கள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரி முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, மேற்படி வீடியோ பதிவுகளைக் கேட்கும் பட்சத்தில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாடு முழுவதும் உள்ள, பஞ்சமி நிலங்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில உச்சவரம்பு சட்டப்படி, சட்டத்திற்குப் புறம்பாக உள்ள நிலங்களைக் கைப்பற்றி, ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும், கனிம வளம் மற்றும் சாராயம்-போதைப் பொருட்களுக்கு எதிராகப் போராடும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு உரியபாதுகாப்பு அளிக்க வேண்டும்.

மேலும் சமூக ஆர்வலர்கள் மீது பதியப்பட்ட, அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். அத்துடன், பொய் வழக்கு பதிவு செய்த சமூக விரோதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது  சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மிக முக்கிய நீர் ஆதாரமாக இருக்கக்கூடிய 13 ஏரிகள் மற்றும் பல்லாயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களை அழித்து, உருவாக்கப்படும், பரந்தூர் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்றும், உடனடியாக நிலம் கையகப்படுத்துதல் உட்பட அனைத்துப் பணிகளையும் நிறுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

நாடாளும் மக்கள் கட்சியில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவி தற்காலிகமானது ஆகும். 

ஒரு நிர்வாகியின், ஆறு மாத கால செயல்பாடுகளை, மேற்பார்வை செய்து, அவரின் பொறுப்புக்கள் தகுந்தபடி உறுதி செய்யப்படும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தேசியத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசு அவர்களுக்கு, முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநில உயர்மட்ட தேர்தல் குழுவில், தேசியத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசு, பொருளாளர் பா.ஷோபனா மற்றும்  மாநில பொதுச்செயலாளர் பா.ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

உள்ளாட்சி, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது, வேட்பு மனுவுக்கான பிணைத்தொகையை  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் (Gpay) பெற்றுக்கொள்ள/செலுத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.