நாமக்கல்:
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் 254வது நினைவு தினம் நாமக்கல் – மோகனூர் சாலையிலுள்ள அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் அவர்களின் உருவப்படத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர்
முனைவர் த.குமரவேல் அவர்கள் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் தோழர். இளமுருகன்,
மாநகரச் செயலாளர்
தோழர். தட்சிணாமூர்த்தி,
மாநகர துணை செயலாளர் தோழர்.குமார்,
மாவட்ட பொறுப்பாளர் தோழர். உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில்
மாநில துணை அமைப்புச் செயலாளர் தோழர். ஹிட்டாச்சி சிவா,எஸ்டிபிஐ மாவட்ட பொது செயலாளர் தோழர். ரஹ்மத்துல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இறுதியில் மோகனூர் ஒன்றிய செயலாளர் தோழர் தனுஷ் அவர்கள் நன்றியுரை நல்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில்
புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் தோழர் அண்ணாமலை ரெட்டியார்,
புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் தோழர். வரதராஜ் உள்ளிட்ட தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட,ஒன்றிய, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் திறளாக கலந்து கொண்டனர்.