பூந்தமல்லி:
பூந்தமல்லியில் உள்ள கோல்டன் ஒப்புலேன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 3500 கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இக்குடியிருப்பில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தினம் தேசிய கொடி ஏற்றியும்,இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பொது நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் அவர் சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய நூல்கள் நூலகத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட.து.
இவ்விழாவை கோல்டன் ஒப்புலேன்ஸ் அடுக்குமாடி உரிமையாளர் சங்க செயலாளர் யோகேஷ், தலைவர் ஜோஷிராஜ், துணை செயலாளர் அருண், துணை தலைவர் வித்யா, பொருளாளர் இப்சிதா, துணை பொருளாளர் திவ்யா மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் கோல்டன் ஒப்புலேன்ஸில் சுதந்திர தினத்தை ஒட்டி வேலப்பன்சாவடி மேத்தா மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது, இந்த முகாமை டாக்டர் தினேஷ் மற்றும் டாக்டர் லட்சுமணசாமி ஆகியோர் சிறப்புற ஒருங்கிணைத்திருந்தனர்.

இந்த 79வது சுதந்திர தின விழாவானது இளம் தலைமுறைக்கு சுதந்திர தினத்தின் அருமையை பறைசாற்றும் விதமாக கொண்டாடப்பட்டதாக கோல்டன் ஒப்புலேன்ஸ் உரிமையாளர் மற்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.