திருவள்ளுர் : மே, 02
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூனிமாங்காடு அரசு ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனவே தங்கள் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அப்பள்ளி ஆசிரியர் பெருமக்கள் மனமுவந்து தங்களுடைய சம்பளத்தின் பிடிப்பில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு அரிசி எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக கொடுத்து உதவியது ஆசிரியர்களின் பண்பை மேலும் உயர்த்தும் விதமாக இருந்தது.
மாணர்களுக்கு உதவிகள் வழங்கிய ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பூனிமாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் ஜே.நற்குணன் கூறினார்.
