தமிழ்நாடு இளைஞர்களே
நம்முடைய அனு விஞ்ஞானி
மறைந்த குடியரசு தலைவர் மரியாதைக்குரிய ஆ.பெ.ஜெ
அப்துல் கலாம் அவர்கள் நன்கு உணர்ந்து தெரிந்து தான் கூறினார்.
இந்த நாட்டின் எதிர்காலம்
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கைகளில் உள்ளது என்று ஆம் முற்றிலும் உண்மையே நாங்களும் உங்களை நம்புகிறோம்.
ஆனால் நீங்களோ நடிக்க தெரிந்த நடிகர்களின் பின்னால் நிற்கின்றீர்கள் இது நியாயமா??
சினிமா என்பது ஒரு தொழில்
நடிக்கின்ற நடிகர்கள் அதற்கு கூலி பெற்றுக் கொள்கிறார்கள்.
அவர்கள் வாங்கும் கூலிக்கு முறையாக முழுமையாக வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்கிறார்கள்.
கருப்பு பண முதலாளியாகி இச்சமூகத்தின் வளர்ச்சியைத் தடுக்கின்ற சிலரும் இருக்கவே செய்கின்றனர்.
கடைசியில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க படம் எடுக்கின்றனர்.
அது படு தோல்வியடைந்தாலும்
படம் வெளியான இரண்டே நாளில் இருநூறு கோடி வசூல் முண்ணூறு கோடி வசூல் என ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கொள்கின்றனர்.
நடிப்பை உண்மை என நம்பி
நடிகர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று நம்பி
அவர்களுடைய கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும்,மலர் மாலை அணிவித்தும்
நூறு ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி நாம் முட்டாள்கள் என நிரூபிக்கின்றோம்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால்
அந்த திரையரங்க த்தை இழுத்து மூடவும் படத்தை திரையிடாமல் செய்யவும் சட்டம் இருக்கும் போது நாம் சட்டத்தை பற்றியோ,
நமது வாழ்க்கையைப் பற்றியோ கவலைப்படாமல் நாட்டைப் பற்றியும் கவலைப்படாமல்
கருப்பு பண நடிகர்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களை தலையில் தூக்கி வைத்து
ஆடுகின்றோம்.
உடனே அவர்கள் ரொம்ப நல்லவர்கள் மாதிரி வேடதாரி வேடம் போடுகின்றனர்.
ஏமாளி ரசிகர்களை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வர முயற்ச்சிக்கின்றனர்.
நாமும் வாழ்க கோஷம் போட்டுக்கொண்டு
வீணர்களாய் இருக்கிறோம்.
இது நியாயமா இளைஞர்களே
சற்று சிந்தியுங்கள்.
அரசியலுக்கு வரும் எவரும் நான் பதவிக்காக வரவில்லை மக்கள் தொண்டாற்றவே
அரசியல் கட்சி துவக்கி உள்ளேன் என்று அறிவிக்கின்றனரா??
இல்லையே கட்சி துவக்கியதும்
முதல்வராக வேண்டும் என்று சிந்தித்து செயல்படுகின்றனர்
தமிழ்நாடு இளைஞர்களும் எந்தவித சிந்தனையும் இன்றி தன் எதிர்காலம் நாட்டின் எதிர்காலத்தை மறந்து,
விட்டேந்தியாக
நடிகர்களின் பின்னால். தன்னுடைய எதிர்காலத்தையும்,
நம் பின்னால் உள்ளவர்களின் எதிர்காலத்தையும் பாழடிக்கின்றனர்.
நடிகர்கள் எந்த சூழ்நிலையிலும்
நலமாகவும். வளமாகவும் உள்ளனர்….. ஆனால் இளைஞர்களே நீங்கள்?
நன்றாக சிந்தியுங்கள் நம்மையும் நாட்டையும் காப்பாற்றிட
நடிகர்களின் பின்னால் செல்லாமல்சுயமாக சிந்தியுங்கள் இந்த நாடு நம்முடையது மறவாதீர்கள்….
(தமிழ்நாடு மக்கள் நலன் கருதி
மனித நேயர் முனைவர் நா.சு செல்வராஜ் சமூக சிந்தனையாளர் -தமிழ்நாடு)
