வள்ளுவர் கோட்டம் : பிப்,07
32 -வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை ஒருங்கிணைப்புடன் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தேனாம்பேட்டை சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயில்சாமி, தேனாம்பேட்டை சரக சட்டம், ஒழுங்கு காவல் துணை ஆய்வாளர் தேவ சகாயம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

மேலும் அவர்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் சங்க துணைத் தலைவர் மாதேஷ்வரன் மற்றும் சங்க உறுப்பினர்களான சுரேந்திரன், செந்தில் அருள்,துரைராஜ், ரவிக்குமார், சீனிவாசன், அஜய் ஆகியோர் வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகளை மதிப்போம், முக கவசம் அணிவோம் உள்ளிட்டவைகளை பதாகைகள் மற்றும் துண்டு பிரச்சுரம் மூலம் சாலை விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்து அறிவுரைகளை வழங்கினர்.