தரமணி : பிப், 05
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய பெருந்திரள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தரமணி ரெயில் நிலையம் அருகிலுள்ள இயக்குநர் அலுவலகத்தின் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் கே.நிர்மலா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் 38 ஆண்டுக்கும் மேலாக இருக்கும் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி இருக்கும் நிலையில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு சென்றடையும் வகையில் அங்கன்வாடி ஊழியர்களின் வாழ்வாதார பெருந்திறள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும். கால முறை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். முறையான வரையறுக்கப்பட்ட ஒய்வூதியம் வழங்கப்பட வேண்டும். அங்கன் வாடி ஊழியர்கள் ஒய்வு பெறும் போது பணிக்கொடையாக 10 லட்சமும் , உதவியாளர்களுக்கு 5 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன் வைக்கப்பட்டது.
சி.ஐ.டி.யு மாநில செயலாளர் ஜி.சுகுமாறன் துவக்கவுரை ஆற்றினார்.
மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி , மாநில செயலாளர்கள் பி.சித்ர செல்வி, எஸ்.ஹேம பிரியா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜி.ஸ்ரீதேவி வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
தென் சென்னை மாவட்ட பொருளாளர் கே.விஜய லெட்சுமி நன்றியுரை ஆற்றினார்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் திறளாக கலந்துக் கொண்டனர்
