தாம்பரம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின்(TNCCF) முதல் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதி அரங்கில் இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐ. கராத்தே கண்ணன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
இக்கூட்டமைப்பின் மாநில விவசாயி அணி பிரிவு செயலாளர் வைகுண்டராஜன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இந்நிகழ்வில்
மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, பகுதி நிர்வாகிகள், மகளிர் அணியினர், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜெ. அக்னி செல்வராசு, ஒய்.டி.பி கிரீன்வேஸ் மற்றும் டிஜி பிஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்தும்,நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இறுதியில் மாநில துணை பொதுச்செயலாளர் கோபிநாதன் அவர்கள் நன்றியுரை நல்கினார்.